எம்பிசி பட்டியலில் மூன்றாம் பாலினத்தவர் - இடஒதுக்கீட்டு அரசாணை ரத்து.

எம்பிசி பட்டியலில் மூன்றாம் பாலினத்தவர் -  இடஒதுக்கீட்டு அரசாணை ரத்து.

சென்னை உயர் நீதிமன்றம் 

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

2015 ஆம் ஆண்டு தமிழக அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினை சேர்ந்த திருநங்கைகள் இதில் பாதிக்கப்படுவார்கள் என சென்னையைச் சேர்ந்த திருநங்கை ரக்‌ஷிதா ராஜ் வழக்கு தொடர்ந்தார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு ஆணையை ரத்து செய்து , 2015 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பு சட்ட பிரிவுகளை மீறுவதாக உள்ளது என்றும், 12 வார காலத்திற்குள் அனைத்து சாதிக் குழுக்களிலும் உள்ள திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி இளந்திரையன் தெரிவித்தார்.

Tags

Next Story