திருமானூர் வங்கியில் கொள்ளை முயற்சி

திருமானூர்  வங்கியில் கொள்ளை முயற்சி
திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி
அரியலூர் மாவட்டம், திருமானூரில் உள்ள திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் கிராமத்தில் தஞ்சாவூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் இவ் வங்கியில் கடந்த 30 ந்தேதி மாலை வங்கி பணிகளை முடித்தபிறகு, வங்கியை பூட்டி விட்டு அலுவலர்கள் சென்றுவிட்டனர். தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் வங்கி விடுமுறை. நேற்று 2ம்தேதி காலையில் வங்கி பணியாளர்கள் திறந்து உள்ளே சென்று பார்த்த போது வங்கியின் வடபுற ஜன்னல் கதவுகள் அறுக்கப்பட்டிருந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

திருமானூர் காவல் நிலையத்திற்கும், மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகளுக்கும் வங்கிய அலுவலர்கள்தகவல் தெரிவித்தனர். திருமானூர் காவல் ஆய்வாளர் கோசலைராமன் தலைமையிலான காவலர்கள் வங்கிக்கு சென்று உடைக்கப்பட்ட ஜன்னலை பார்வையிட்டனர். ஆய்வில் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. வங்கியின் ஜன்னலை மரம் அறுக்கும் மிஷினை கொண்டு அறுத்து உள்ளே வந்த திருடர்கள், வங்கியின் அலார பாதுகாப்பு பார்த்து விட்டு அல்லது லாக்கர் கதவை திறக்க முடியாமல் திருடர்கள், கொள்ளையடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

இதனால் வங்கியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் தப்பியது. கைரேகை நிபுணர்கள் வங்கியில் பதிவான கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். அரியலூர் போலீஸ் டிஎஸ்பி சங்கர்கணேஷ், மத்திய கூட்டுறவு வங்கியின் உயரதிகாரிகள் வந்து வங்கியை பார்வையிட்டனர். சிசிடிவி கேமரா காட்சியில், வங்கியில் ஜன்னல் கதவை அறுத்து திருட முயன்ற மரம நபர்கள், முகத்தை மறைத்து மாஸ்க் அணிந்திருந்த்தாக தெரிகிறது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story