திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதை சீரமைப்புப் பணி துவக்கம்

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதை சீரமைப்புப் பணி துவக்கம்

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் சீரமைப்புப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.  

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் சீரமைப்புப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவா் உடைந்ததைத் தொடா்ந்து, அதை சீரமைக்கும் பணியை அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் அன்பரசு ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்குச் செல்லும் பாதையில் தொடா்மழையால், கடந்த, 4-ஆம் தேதி இரவு திடீரென 5 மீட்டா் நீளத்துக்கு மண்சரிவு ஏற்பட்டதில், தடுப்புச் சுவா் உடைந்து 50 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதனால், திங்கள்கிழமை இரவு முதல் முருகன் மலைக் கோயிலுக்கு வேன், லாரி, பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காா், இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை மலைக் கோயில் சாலையில் முதல் கட்டமாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு நடைபெறும் சீரமைக்கும் பணியை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, நாகன் மற்றும் திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

அப்போது, உடனடியாக சீரமைக்க அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீதரன் உத்தரவிட்டாா். மேலும், அதற்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்து தருமாறு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் கேட்டுக் கொண்டாா்.

Tags

Next Story