இந்த தேர்தல் மோடிக்கான தேர்தல்- எல் முருகன் பேச்சு
இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கான தேர்தல் என மேட்டுப்பாளையத்தில் எல் முருகன் பேசினார்.
நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் தொகுதிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க, அ.ம.மு.க, த.மா.க, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, த.ம.மு.க, ஐ.ஜே.க, புதிய நீதிகட்சி, இ.ம.க.மு.க ஆகிய கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன், பா.ஜ.க-வினரின் ஊழியர் கூட்டம் மேட்டுப்பாளையம் TKV மஹாலில் நடைப்பெற்றது. திரளாக கலந்து கொண்டோர் மத்தியில் நடைப்பெற்ற இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சரும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான டாகடர் எல்.முருகன் “இந்த தேர்தல் பிரதமர் நரேந்திர மோடி ஜி- க்கான தேர்தல். ஸ்டாலின், எடப்பாடி என்ன பிரதமராக போகிறார்களா… ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத அ.தி.மு.க எப்படி பிராமராக போகிறார்கள்.
கடந்த மூன்றாண்டுகள் திமுக ஆட்சியை கண்டு மக்கள் அதிருப்த்தியில் இருக்கிறார்கள். எனவே திமுக-வை தூக்கி எறிவதற்கு மக்கள் தயராக இருக்கிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன மதுபானை கடைகள் குறைப்பு, கல்வி கடன், விவசாய கடன், மகளீர் சுய உதவிக்குழு கடன் ஆகியவற்றை ரத்து செய்வதாக கூறினார்கள். ஆனால், வழக்கம் போல் சொல்வது எதையும் செய்யாத ஓர் ஆட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சில், சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாடு முழுவதும் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையத்திற்கான ரயில் சேவை வசதியினை மேம்படுத்தியுள்ளோம். இனியும் அடுத்து அமையகூடிய பிரதமர் நரேந்திர மோடி ஜி ஆட்சியில் இந்த சேவை தொடரும்…” என்றார்.