ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இது போல நடந்திருக்காது - சீமான்

ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இது போல நடந்திருக்காது - சீமான்

மருதுபாண்டியரின் 222 வது குருபூஜை விழா 

ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் குண்டை வீசி இருக்கலாம். ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இது போன்ற பிரச்சனை உருவாகியிருக்காது என் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

காளையார் கோவிலில் மருதுபாண்டியரின் 222 வது குருபூஜை விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் குண்டை வீசி இருக்கலாம். ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இது போன்ற பிரச்சனை உருவாகியிருக்காது என்றார். மேலும், வரலாற்றில் தமிழ் போராட்ட வீரர்களை மறைக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அந்த குற்றச்சாட்டை கூற உங்களுக்கு என்ன தகுதி உள்ளது நீங்கள் தான் எங்களது வரலாற்றை சிதைத்தது. ஆர்எஸ்எஸ் - யின் கோட்பாடுகளை மத்திய அரசு அப்படியே செயல்படுத்தி வருகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு நக்கலாக சிரித்த அண்ணாமலை அவரை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி இருந்தால் ரசித்திருப்பார். கூட்டணிக்கு அழைத்தபோது நான் போகவில்லை கமலஹாசன் கட்சியிலா சேருவேன் என்றவர், விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள் என்பதை நான் வரவேற்கிறேன் ஆனால் அதனை சொல்ல தகுதியும், தராதரமும் வேண்டும் என்றார்.
Tags

Read MoreRead Less
Next Story