குழந்தை கடத்தல் குற்றவாளி புகைப்படம் வெளியீடு

குழந்தை கடத்தல் குற்றவாளி புகைப்படம் வெளியீடு

காவல்துறை வெளியிட்டுள்ள புகைப்படம் 

தூத்துக்குடியில் கடந்த ஒன்பதாம் தேதி அதிகாலை சாலை ஓரத்தில் தாயுடன் படுத்திருந்த நான்கு மாத பெண் கைக்குழந்தையை கடத்திய நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் 9498194522,9942179050 என்ற என்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தூத்துக்குடியில் அந்தோணியார் கோயில் பகுதி அருகே சாலையில் வசித்து தர்மம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் வேலூரை சேர்ந்த சந்தியா என்ற கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண் தனது நாலு மாத பெண் குழந்தையுடன் பிழைப்பு நடத்தி வந்துள்ளார் இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அதிகாலை சந்தியா தனது நாலு மாத கைக்குழந்தையுடன் சாலையில் ஓரத்தில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது மர்மநபர் ஒருவர் நாலு மாத பெண் குழந்தையை தூக்கி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சந்தியா தென்பாகம் காவல்துறையிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர் இந்த குழந்தை கடத்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் பக்கத்து மாவட்டங்களான திருநெல்வேலி நாகர்கோவில் மதுரை விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கும் காவல்துறையினர் சென்று குழந்தை கடத்தலில் ஈடுபடும் கும்பல் குறித்தும் கடத்தலில் ஈடுபட்ட நபர் குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் குழந்தை கடத்தல் நடைபெற்று எட்டு நாட்களாகியும் இதுவரை கடத்தல் நபர் கண்டுபிடிக்கப்படாது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் தற்போது இந்த குழந்தை கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் கடந்த எட்டாம் தேதி சிவராத்திரி அன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் ஊதா நிற சட்டை கருப்பு வேஷ்டி அணிந்த மூன்று பேர் இரவு இரண்டே கால் மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்பு கோவிலில் இருந்து வெளியே வந்து அதில் ஒரு நபர் அந்தோணியார் கோயில் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த தாயிடமிருந்து குழந்தையை கடத்தி சென்றுள்ளார் என்பது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல் துறை பொதுமக்கள் கடத்தலில் ஈடுபட்ட நபர் குறித்து அடையாளம் தெரிந்தால் பொதுமக்கள் 9498194522,9942179050 என்ற என்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags

Next Story