பருவநிலை மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் தூத்துக்குடி வெள்ள அறிக்கை
மழை வெள்ள மீட்பு ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து நேபாள தலைநகர் காட்மாண்டுவில் வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள பருவநிலை மாற்ற மாநாட்டில் ஆய்வுகள் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தூத்துக்குடியில் நடைபெற்ற வெள்ளம் மீட்பு கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 பெய்த கன மழை மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகரம், சாத்தான்குளம், ஏரல், ஸ்ரீவைகுண்டம் ,காயல்பட்டினம் ,திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் விவசாயிகள் மீனவர்கள் உப்பள தொழிலாளர்கள் என அனைவரும் வாழ்வாதாரம் இழந்தனர் இந்த மழை வெள்ள பாதிப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ள மீட்பு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் பெரியார் மையத்தில் வைத்து நடைபெற்றது இதில் சமூக செயல்பாட்டாளர் டி எஸ் எஸ் மணி, கிருஷ்ணமூர்த்தி ,காந்தி மள்ளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மழை வெள்ள பாதிப்பு குறித்து மேலும் இதிலிருந்து தூத்துக்குடி மாவட்ட மக்களை மீட்பது குறித்து தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர் இந்த கருத்தரங்கில் பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 15 முதல் 19 ஆம் தேதி வரை நேபாள தலைநகர் காட்மான்டுவில் உலக சமூக மாமன்றம் சார்பில் நடத்தப்படும் பருவநிலை மாற்ற மாநாட்டில் வைக்கப்பட்டு இதற்குரிய தீர்வுகள் கிடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தனர்
Next Story