அச்சுறுத்தும் நீர் நிலை விபத்துகள் - 2 நாட்களில் 15 பேர் உயிரிழப்பு

அச்சுறுத்தும் நீர் நிலை விபத்துகள் -  2 நாட்களில் 15 பேர் உயிரிழப்பு

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கி 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேங்காய் பட்டணம் கடற்கரையில் மீன்பிடி துறைமுகப் பகுதியில் தந்தையுடன் சென்ற 7 வயது சிறுமி ஆதஷா உயிரிழந்தார். இதேபோல் கோடி முனை கடற்கரை பகுதிக்கு சென்னையை சேர்ந்த 20 பேர் சுற்றுலா வந்தனர். அவர்களில் 6 பேர் பாறைகளில் ஏறி நின்ற போது, ராட்சத அலை இழுத்துச் சென்றது. அவர்களில் இரண்டு பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.

இதே போல் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்கள் 17 பேர் குமரிக்கு வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் காலை லெமூர் கடற்கரைக்கு சென்ற போது 7 பேரை கடல் அலை இழுத்துச் சென்றது. அவர்களில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஐந்து பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மேலும் கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சுபின் வர்கீஸ் என்பவர் அருவிக்கரை தடுப்பணையில் மூழ்கி இறந்தார்.

மேலும் நாகர்கோவில் புத்தேரி, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தக்கலை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த விபத்துகளில் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரது உடல்களும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனை நடந்தது. இதனால் பிணவறைக்கு முன்பு குவிந்த அவர்களது உறவினர்கள் கதறல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story