வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுதிறனாளிகள் மூன்று சக்கர வாகனப்பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுதிறனாளிகள் மூன்று சக்கர வாகனப்பேரணி

பேரணி

அரியலூரில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலில் நுறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் வலியுறுத்தி அரியலூரில், மாற்றுத்திறனாளிகள் நலம் அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா கொடியசைத்து வைத்தார்.

இந்த பேரணியானது பிரதான சாலை வழியாகச் சென்று அண்ணாசிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் 100 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கென கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story