கொலை சம்பவம்போல் இன்ஸ்டா வீடியோ - பள்ளி மாணவர்கள் கைது

கொலை சம்பவம்போல் இன்ஸ்டா வீடியோ -  பள்ளி மாணவர்கள் கைது

அம்மாபட்டி போலீசார் 

சாத்தூரில் கொலை செய்வது போல் டிக் டாக் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 6 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் சாத்தூர் உட்கோட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை திருவிழாவில் சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த 10 ம் தேதி சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடை பாரில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். பார் ஊழியரை கொலை செய்த சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளத்தில் பரவியது.

இந்த நிலையில் கலைத் திருவிழாவில் கலந்து கொண்ட சின்னக்காமன் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 வகுப்பு படிக்கும் 6 மாணவர்கள் பார் ஊழியரை வெட்டி கொலை செய்த காட்சியை போல் கலை திருவிழா நடைபெறும் பள்ளி வளாகத்துக்கு வெளியே டிக் டாக் செய்து தங்களுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ சமூக வலை தளத்தில் வேகமாக பரவியது. இந்த நிலையில் பார் ஊழியர் கொலை செய்யும் காட்சியை போல் டிக் டாக் செய்து சமூக வலை தளத்தில் பதிவிட்ட 6 பள்ளி மாணவர்கள் மீது அம்மாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்மாபட்டி போலீசார் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளி மாணவர் களுக்கு அறிவுரை வழங்கி ஜாமீனில் விடுதலை செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story