திருச்செந்தூர் வைகாசி விசாகம் ஆட்சியர் ஆலோசனை
ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகம் திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகின்ற 22ஆம் தேதி நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னா் மகா தீபாராதனையாகி, கிரி வீதி வலம் வந்து திருக்கோயில் சேர்கிறாா். திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக வருகின்ற 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருக்கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். விசாக தினத்தில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படும். அதேபோல் விசாகத்திற்கு மறுநாள் 23ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 22.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story