பாஜக கூட்டணியில் இணைந்தது தமாகா!

பாஜக கூட்டணியில் இணைந்தது தமாகா!

தமாகா - பாஜக

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தேர்தலை சந்திக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் என அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, " பிரதமர் மோடிக்கு ஆதரவாக எப்போதும் குரல் கொடுப்பவர் ஜி.கே வாசன். பிரதமர் மோடி - ஜி கே வாசன் இடையிலான நட்பு சிறப்பு வாய்ந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க கட்சியாக விளங்குகிறது.

பெரிய மாற்றத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சிலரின் சதியால் மூப்பனார் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க முடியவில்லை.

கடுஞ்சொல் பேசாதவர், வித்தியாசமான கண்ணோட்டம் கொண்டவர் ஜி.கே வாசன்." எனக் கூறினார்.

மேலும் மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார் என தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story