பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பா?: தமிழக அரசு விளக்கம்

பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பா?: தமிழக அரசு விளக்கம்

Preganant

தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு டாக்டர்கள் பணியிடம் காலியாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழக அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2001-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிரசவத்தின்போது ஒரு லட்சம் பேரில் 134 ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம் கடந்த 2018-20-ல் 54 ஆக குறைந்தது. தற்போது 2023-24-ல் இது 45.5 ஆக மேலும் குறைந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story