டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமனம்- அமைச்சர் மதிவேந்தன்

டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமனம்- அமைச்சர் மதிவேந்தன்

மதிவேந்தன்

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வன பாதுகாவலர் அலுவலகத்தில் வனத்துறை தொடர்பான ஆலோசனக் கூட்டம் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மதிவேந்தன், ''வனத்துறையில் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. யானைகளை கண்காணிக்க, பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் உள்ளனர். இதற்காக கூடுதல் நிதியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். இதற்காக தனியாக குழு அமைக்க முடியாது.

வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை, நீக்குவது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.'' அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Tags

Next Story