சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு!!

gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,040-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை, ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.99-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் தங்கம் வாங்க முடியாத வகையில் விலை உச்சத்தை தொடும் என கூறப்படுவதால் தற்போதே தங்கத்தை வாங்கி வைக்க வேண்டும் என்ற காரணத்தால் நகைக்கடைகளில் நாள் தோறும் கூட்டம் அலைமோதுகிறது. திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் வாங்குவது இந்தியாவில் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் இந்திய மக்கள் தங்க நகை மீது அதிகளவு ஈர்ப்பு கொண்டுள்ளனர். டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைபிரியர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று (19.12.2024) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.65 குறைந்து ரூ.7,070க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.520 குறைந்து ரூ.56,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (19.12.2024) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.65 குறைந்து ரூ.7,070க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.520 குறைந்து ரூ.56,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (20.12.2024) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.7,040க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.56,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 98,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story