தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை!!

gold
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் நேற்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,280-க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,070-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,560-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர். கடந்த திங்கட்கிழமையில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடக்கத்தக்கது. கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.