தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு!!
X

gold

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கும் விற்பனையாகிறது. நேற்று வெள்ளி விலை சற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story