சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!!

gold
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,110-க்கும் சவரன் ரூ.56,880-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கம் மிகவும் ஆடம்பரமான பொருளாக உள்ளது. இந்திய மக்கள் தங்க நகை மீது அதிகளவு ஈர்ப்பு கொண்டுள்ளதாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் விற்பனை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்துக்கு சென்று வருவதால் இப்போதே பலரும் அதிகளவு தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர். இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ரூ. 57,200-க்கு விற்பனையானது. இந்த நிலையில், ஆண்டின் கடைசி நாளான இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,110-க்கும், ஒரு சவரன் ரூ. 56,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக ஒரே விலையில் விற்கப்பட்ட வெள்ளியின் விலை செவ்வாய்க்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 98-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.