சேலத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

சேலத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

கோட்டைமாரியம்மன் திருக்குடமுழுக்கு பெருவிழா

கோட்டை மாரியம்மன் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சேலத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று கோட்டை மாரியம்மன். கோட்டை மாரியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு பெருவிழாவை யொட்டி 27.10.2023 வெள்ளிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளி கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story