வெள்ள நீரில் சிக்கிய சுற்றுலா வாகனம்;சுற்றுலா பயணிகள் மீட்பு



ஊட்டி படகு இல்லம் சாலையில் கடல் போல் தேங்கிய மழை நீரில் சிக்கிய சுற்றுலா பயணிகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
ஊட்டி படகு இல்லம் சாலையில் கடல் போல் தேங்கிய மழை நீரில் சிக்கிய சுற்றுலா பயணிகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்தது. மதியம் பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் ஊட்டி பேருந்து நிலையம் வழியாக படகு இல்லம் செல்லும் ரயில்வே தரைப்பாலத்தின் கீழ் வெள்ள நீர் தேங்கியது. அப்போது அவ்வழியாக சென்ற சுற்றுலா வாகனம் பயணிகளுடன் ஒன்று வெள்ள நீரில் சிக்கியது. உடனடியாக தகவலறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தில் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகளையும் வாகனத்தையும் மீட்டனர்.
Next Story



