கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

படகு இல்லத்தில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள் 

பிரதமர் மோடி வருகையால் விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று தடை செய்யப்பட்ட சுற்றுலா பயணிகள் இன்று பல்வேறு கட்டுபாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி விவேகானந்தர் கன்னியாகுமரி விவேகானந்தா மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருவதையடுத்து அங்கு சுற்றுலா பணிகள் நேற்று மதியத்துக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இன்று காலை விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் முகவரி உட்பட பல்வேறு தகவல்களை போலீசார் பதிவு செய்து பலத்த சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல அனுமதித்தனர்.

பயணிகள் சென்ற படகிலும் ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தியானம் மேற்கொண்டுள்ள பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. மற்ற இடங்களுக்கு வழக்கம் போல் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். பிரதமர் தியானம் செய்யும் மண்டப பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு போலீசார் மட்டுமின்றி, கமாண்டோ வீரர்களும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story