அரசு விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் உற்பத்தி

அரசு விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் உற்பத்தி

அரசு விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் உற்பத்தி

மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு அரசு விதைப் பண்ணையில் 5 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். அப்போது ஆத்துார் கிச்சலி சம்பா, சிவன்சம்பா, டி.கே.எம் 15, உள்ளிட்ட நெல் ரகங்களின் நன்மைகள் குறித்தும், அதன் வளர்ச்சி பற்றியும் கேட்டறிந்தார். மேலும் விவசாயிகளுக்கு தேவையான ஏடிடீ 37,பிபீடி 5204 நெல் ரகங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு சுத்தகரிப்பு செய்யப்படும் விதைகள் மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார். இணை இயக்குனர் (திட்டங்கள்) பெரியசாமி, ஆத்மா தலைவர் ரவி,வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story