ரயில் மறியல் முயற்சி: 11 விவசாயிகள் கைது!

ரயில் மறியல் முயற்சி: 11 விவசாயிகள் கைது!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவில்பட்டியில் ரயில் மறியலுக்கு முயன்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.


டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவில்பட்டியில் ரயில் மறியலுக்கு முயன்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான துப்பாக்கி சுடு நடத்தக்கூடாது. வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

வேளாண் கடனை முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அதேகோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று கோவில்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலையில் ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருமைராஜ் தலைமையில் புதுரோடு விலக்கில் இருந்து ரயில் நிலையத்துக்கு கோஷம் எழுப்பியவாறு மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு ெசன்றனர். ரயில் நிலைய நுழைவாயிலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், வனசுந்தர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். ரயில்மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அவர்களை போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் ரயில் மறியலுக்கு முயற்சித்தனர். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Tags

Next Story