போலி ஐ.டி மூலம் ரயில் டிக்கெட்டுகள் - கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர் கைது

X
போலி ஐ.டி மூலம் ரயில் டிக்கெட்டுகள் - கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கணினி மைய உரிமையாளர் கைது
போலி ஐ.டி மூலம் ரயில் டிக்கெட்டுகள் - கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கணினி மைய உரிமையாளர் கைது
போலி ஐ.டிகளை உருவாக்கி ரெயில் டிக்கெட் எடுத்து கூடுதல் விலைக்கு விற்பதாக எழுந்த புகாரின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஈரோடு அருகே உள்ள நம்பியூர பகுதியில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் போலி ஐ.டி மூலம் ரெயில் டிக்கெட் எடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சேலம் ரெயில்வே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மீனா மற்றும் போலீசார் அந்த கம்ப்யூட்டர் சென்டரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி ஐ .டி மூலம் எடுக்கப்பட்ட ரூ.29 ஆயிரம் மதிப்பிலான 27 டிக்கெட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கணினி மைய உரிமையாளரான ரமேசையும் கைது செய்தனர்.
Tags
Next Story
