மோப்ப நாய்களுக்கான பயிற்சி நிறைவு விழா!
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படைவளாகத்தில் மோப்ப நாய்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படைவளாகத்தில் மோப்ப நாய்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் மோப்ப நாய்களுக்கான சிறப்பு பயிற்சி மையம் உள்ளது. இங்கு மோப்ப நாய்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 52 வாரங்களாக அருணாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்புப்படை பிரிவுகளில் உள்ள நாய்களுக்கு இங்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அப்போது பேரிடர் காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய நபர்களை உயிருடன் மீட்பது, வீரர்கள் தெரிவிக்கும் கட்டளைகளுக்கு செயல்படுதல், அடிப்படை ஒழுக்கம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், அவைகளை வழிநடத்தும் வீரர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சி நிறைவு விழா தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் நடைபெற்றது. பேரிடர் மீட்புப் படை கமாண்டன்ட் அகிலேஷ் குமார் மற்றும் படை பிரிவின் கால்நடை டாக்டர் சைலேந்திர சிங் ஆகியோர் மோப்ப நாய்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு நாய்களின் வீர தீர செயல்களை பார்வையிட்டடனர். மேலும் மோப்ப நாய்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டன. மோப்ப நாய்களுக்கான பயிற்சியாளர் ஈஸ்வர ராவுக்கு சிறப்பு விருதினை வழங்கினர். நிகழ்ச்சியில் மீட்பு படை அலுவலர்கள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
Next Story