காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு

காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு
பயிற்சி வகுப்பு
அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் குறித்து ஒருவார கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

அரியலூர்,14- அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கலந்தாய்வு கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் குறித்து ஒருவார கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

பயிற்சி தொடக்க விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சா. செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி M. கிரிஸ்டோபர், திருச்சி சட்டக் கல்லூரி பேராசிரியர் பிச்சப்பிள்ளை (ஓய்வு) ஆகியோர் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு புதிய சட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர். வருகின்ற ஜூலை 1ஆம் தேதி நடைமுறைக்கு வரவுள்ள புதிய குற்றவியல் சட்டமுறை சட்டங்கள், இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் (ஐஇஎ) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக 1.பாரதிய நியாய சன்ஹிதா 2023, 2.பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் 3.பாரதிய சாக் ஷியா சன்ஹிதா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு நடைமுறைபடுத்த உள்ள நிலையில், புதிய குற்றவியல் சட்டம் பற்றி காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சிவகுமார் (HQ), அந்தோணி ஆரி (Cyber crime), மற்றும் விஜயராகவன் (PEW) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கும் விதமாக தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Tags

Next Story