தஞ்சை வழியாக ரயில்கள் - தென்னக ரெயில்வேக்கு பொதுமக்கள் பாராட்டு

நாகர்கோவில் மற்றும் கோவையில் இருந்து தஞ்சை வழியாக சென்னை, மும்பைக்கு புதிய ரெயில்கள் இயக்க ரெயில்துறைக்கு பரிந்துரை செய்த தென்னக ரெயில்வே நிர்வாகத்திற்கு டெல்டா மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தஞ்சை - கும்பகோணம் - விழுப்புரம் ரெயில் பாதை சுமார் 145 ஆண்டுகள் பழமையானது. இந்த பாதை வழியாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட தென் பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டதால் மெயின் லைன் பாதை என அழைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள கும்பகோணம் ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையமாகும். இந்த ரெயில் நிலையத்தை சுவாமிமலை, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், சூரியனார்கோவில் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கு செல்ல பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, திருச்சி, பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கும், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நேரடி ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்டா மாவட்ட ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ரெயில் பயணிகள் பயன்பெறும் வகையில், நடப்பு ஆண்டிற்கான ரெயில்வே கால அட்டவணை குழு கூட்டத்தில், 3 புதிய ரயில்கள் தென்னக ரெயில்வே துறையால் ரெயில்வே துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்தியா முழுவதும் இயக்கப்படும் ரெயில்களின் கால அட்டவணையை நிர்ணயம் செய்ய ஆண்டுதோறும் இந்தியன் ரெயில்வே கால அட்டவணை குழு கூட்டம் நடக்கும். வாராந்திர- தினசரி ரெயில் இந்த குழுவில் ரெயில்வே துறை உயர் அதிகாரி தலைமையில் அனைத்து ரயில்வே மண்டலங்களின் இயக்குதல் பிரிவு அதிகாரிகளும், கால அட்டவணை கட்டுப்பாட்டாளர்களும் கலந்து கொண்டு வரும் ஆண்டிற்கான ரெயில்கள் கால அட்டவணையில் மாற்றம், புதிய ரெயில்கள் இயக்கம், ரெயில் இயக்க நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம்.

அதன்படி நடப்பு ஆண்டிற்கான கூட்டம் ராஜஸ்தானில் நடந்து வருகிறது. இந்த குழுவின் கூட்டத்தில் ஆலோசிக்க ஏதுவாக தென்னக ரெயில்வே மெக்கானிக்கல் பிரிவு இசைவு கோரி அனுப்பப்பட்ட சுற்றறிக்கை சமூக வலை தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அந்த சுற்றறிக்கையில் நாகர்கோவிலில் இருந்து மும்பை குர்லா லோக்மான்ய திலக் முனையம் இடையே தஞ்சை, கும்பகோணம் வழியாக வாரம் 3 முறை இயக்கும் வகையில் புதிய ரெயிலும், கோவையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு பழனி, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் வழியாக வாராந்திர ரெயிலும், ராமேஸ்வரம்-தாம்பரம் இடையே பட்டுக்கோட்டை வழியாக தினசரி ரெயிலும் இயக்க கருத்துரு தயாரிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நெல்லை-வைஷ்ணவிதேவி கத்ரா மற்றம் ஜோத்பூர், ராமேஸவரம்- மால்டா இடையே புதிய ரெயில்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் கருத்துரு தயார் செய்து ரெயில்வே துறைக்கு பரிந்துரை செய்த தென்னக ரெயில்வே மற்றும் கோட்ட அளவிலான போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் மற்றும் கால அட்டவணை கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோருக்கு பயணிகள் மற்றும் தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் சார்பில் பாராட்டுகள் தெரிவித்துகொள்றோம்.

Tags

Next Story