பழங்குடியின சான்றிதழ்: ஆர். ராசா எம்பி விமர்சனம்

பழங்குடியின சான்றிதழ்: ஆர். ராசா எம்பி விமர்சனம்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்பி

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினச் சான்றுகள் வழங்கினால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று விடுமோ என்று அச்சத்தில் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா குற்றம் சாட்டினார்

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினச் சான்றுகள் வழங்கினால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று விடுமோ என்று அச்சத்தில் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா குற்றம் சாட்டினார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டாம் வன அலுவலகத்தில் பட்டியல் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி , பயிற்சி முடித்த பழங்குடி இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கலந்து கொண்டு பழங்குடி இன இளைஞர்கள் 40 பேருக்கு ஓட்டுனர்,

உரிமம், 21 நபர்களுக்கு தேனி வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்கள்,8 நபர்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பழங்குடி இன கிராமத்தைச் சேர்ந்த 15 குடும்பத்தினருக்கு இலவச கேஸ் அடுப்பு சிலிண்டர் ஆகியவற்றை வழங்கினார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது தாளவாடி மலைப்பகுதியில் வனவிலங்கு மனித மோதல் ஏற்பட்டு பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளிகள் உயிரிழப்பு ஏற்படுகிறது அவர்களுக்கு அரசு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கிய நிலையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமிழக முதல்வரிடம் முறையிட்டு 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக நிவாரணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தாளவாடி மலைப்பகுதியில் வனவிலங்குகளை விரட்டுவதற்காக பாதுகாப்பு படை சிறப்புப் பணிகள் நீங்கள் அமைக்கப்பட்டு பறக்கும் படை ஏற்படுத்தப்பட்டு வனவிலங்குகளை வேறு பகுதிக்கு விரட்டும் நடவடிக்கைக்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வனவிலங்கு களிடமிருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க கர்நாடக மாநிலத்தில் தண்டவாளத்தால் அமைக்கப்பட்டுள்ள வேலி போல் தாளவாடி மலைப்பகுதியில் அமைக்க வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து தண்டவாள வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள,

மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க பழங்குடியினர் ஆணையர் நேரடி கள ஆய்வு செய்து பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தான் இன மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தும் இதுவரை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது இதற்கு பாஜகவினர் இடையூறாக உள்ளதாக கருதப்படுகிறது.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றுகள் வழங்கினால் திராவிட முன்னேற்றக் கழகம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடுமோ என்ற அச்சத்தில் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகின்றது என குற்றம் சாட்டினார்.

இனி வரும் ஆண்டுகளில் காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் இந்தியாவில் யார் பிரதமர் என நிர்ணயம் செய்ய திமுக தலைவர் தான் முடிவு செய்ய உள்ளார். அப்போது விரைவில் அவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்படும் என பேட்டியளித்தார்.

Tags

Next Story