லாரிகள் வேலை நிறுத்தம் : ரூ.18 கோடி தேயிலை தூள் தேக்கம்
லாரிகள் வேலை நிறுத்தத்தால் குன்னூரில் 18 கோடி ரூபாய் அளவிலான தேயிலை தூள்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாநிலங்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக உள்ள தேயிலை தொழில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் தேயிலை தூள்கள் குன்னூர் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு கோவை, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக லாரிகளின் தொடர் வேலை நிறுத்தத்ததால் தேயிலை தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. தேயிலை குடோன்களில் சுமார் சுமார் 18 கோடி மதிப்பிலான தேயிலை தூள்கள் மூட்டை மூட்டையாக தேக்கம் அடைந்துள்ளன.
Next Story