கரடியை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8 நாட்களாக சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குன்னூர் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு, தண்ணீருக்காக கரடி ஒன்று கடந்த 13-ம் தேதி டென்ட் ஹில், குன்னூர் பேருந்து நிலையம், தீயணைப்பு அலுவலக வளாகம், ராஜாஜி நகர், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு, பெட்போர்டு உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் தேனடை, விளக்கெண்ணெய், வெல்லம் என கரடியை ஈர்க்கக் கூடிய உணவு பொருட்கள் வைக்கப்பட்ட கூண்டு கிளப் ரோடருகே வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் குறித்து தெரிந்து கொள்ள தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story