பாமக விற்கு சாதகமாக டிடிவி .... புதிய கூட்டணியா?
அமமுக , பாமக, ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்றுசொல்லி வரும்நிலையில், அதிமுக யார் யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற ஆர்வம் எழுந்துவருகிறது. அத்துடன், வரும் 2024 தேர்தலில் வழக்கம் போல் அதிமுக. திமுக இருக்கும் நிலையில் மூன்றாவது கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய மூன்று அணிகளும் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் என்றும் இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் மற்றும் விஜயகாந்தின் தேமுதிக இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மத்திய பா.ஜ., அரசுக்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி அடிமையாக இருப்பதாக, தி.மு.க., அமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்துள்ள பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, 'துரோக வரலாற்றின் கூடாரமே, தி.மு.க., தான்' என மிகக் கடுமையாக சாட்டினார். இரு கட்சிகளுக்கும் இடையில் மோதல் முற்றியுள்ளதால், லோக்சபா தேர்தலில் கூட்டணி மலர இனி வாய்ப்பே இல்லை என கூறப்பட்டது.
சமீப காலம்வரை திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கும் என்றார்கள். ஆனால், நெய்வேலி போராட்டத்தில் அந்த கணிப்புகள் தகர்ந்தன. அப்படியானால், அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க போகிறதா? என்ற அடுத்த சந்தேகம் எழுந்தது. ஆனால், அன்புமணி ராமதாஸ், தன்னுடைய பேட்டியில் "நான் கேட்கிறேன் அவர் ஊரில் வைத்துள்ள 200 ஏக்கரை அரசு அதிக விலை கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா? என்றும், திருச்சியில் வேளாண் சங்கமத்தை தொடங்கி வைத்து விட்டால் விவசாயிகளை, நிலங்களை காப்பாற்றி விட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி அந்த கணிப்பையும் நொறுக்கிவிட்டார்.
இந்நிலையில் டிடிவி தினகரன், பாமக வுக்கு ஆதரவாக பாமக இல்லாமல் வட தமிழகத்தில் அதிமுகவால் வாக்கு பெற முடியாது. எடப்பாடி தொகுதியிலேயே பாமக ஆதரவால் தான் பழனிசாமி வெற்றி பெற்றார்" என்று கூறியுள்ளார்.
தினகரனின் இந்த பேச்சுக்கு பின்புலமாகவும் பாஜக இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, ஒருபக்கம் அன்புமணி, இன்னொரு பக்கம் தினகரனை வைத்து, எடப்பாடியை "பணிய" வைக்கும் முயற்சியைதான் பாஜக தற்போது முன்னெடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில் மூன்றாவது கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய மூன்று அணிகளும் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் என்றும் இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் மற்றும் விஜயகாந்தின் தேமுதிக இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை தேர்தல் நெருங்கிய பிறகு தான் சொல்ல முடியும். அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக , தேமுதிக மற்றும் பாமகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவ்வாறு இணைந்தால் இந்த புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.