அதிமுக உண்ணாவிரதத்தில் தூத்துக்குடி நிர்வாகிகள் பங்கேற்பு!

அதிமுக உண்ணாவிரதத்தில் தூத்துக்குடி  நிர்வாகிகள் பங்கேற்பு!

சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகிறது அதிமுக. சட்டப்பேரவையில் கடந்த நான்கு நாட்களாக கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் அமளியில் ஈடுபட்டது. அமளியால் நடப்புக் கூட்டத் தொடர் முழுவதுமே அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, செங்கோட்டையன், ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அதிமுக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், வட்ட பிரதிநிதி அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story