தமிழக வெற்றிக் கழகம் - கொடி அடுத்த வாரம் அறிமுகம் செய்ய வாய்ப்பு

தமிழக வெற்றிக் கழகம் கொடியை நடிகர் விஜய் வீடியோ மூலம் அறிமுக செய்வார் என தகவல்
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய சென்னை சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் செயலி மூலம் இல்லாமல் வேறு ஏதேனும் முறையில் உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தவெக சார்பாக மாநாடு நடத்தி அந்த மாநாட்டில் கட்சியின் கொடி, சின்னம், அதனுடைய நிறங்கள் குறித்து கட்சியின் தலைவர் வெளியிடுவதாக இருந்தது. இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநாட்டில் வெளியிட இருந்த கட்சியின் கொடி அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் செயலியை வீடியோ மூலம் வெளியிட்டது போல் கட்சி கொடியும், வீடியோ மூலம் தலைவர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் கட்சியின் கொடி இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளது.

Tags

Next Story