தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுந்தரலிங்கம் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

தமிழக வெற்றிக்கழகம்  சார்பில் சுந்தரலிங்கம் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
தூத்துக்குடி சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் 254 வது பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் அமைந்துள்ள அவரது திருவுரு சிலைக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கத்தின் 254 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மற்றும் பெசில் ஆகியோர் தலைமையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Tags

Next Story