தவெக சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
கடந்த ஆண்டு தொகுதி வாரியக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியது போல், இந்த ஆண்டும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை தேர்வு செய்யும் பணி கடந்த ஒரு மதங்களாக நடைபெற்று வந்த நிலையில் அந்த பணி நேற்று நிறைவு பெற்றுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் விவரங்களை நேற்றோடு சமர்ப்பிக்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் அந்த வகையில் மாணவர்களை தேர்வு செய்யும் பணி நிறைபெற்ற நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விழாவில் பங்கேற்பதற்கான பாஸ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாஸ் காண்பித்தால் மட்டும் விழாவில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக கட்சியை தொடங்கப்பட்டு கட்சியின் தலைவர் விஜய் முதலில் பங்கேற்கும் விழாவாக இது கருதப்படுகிறது. இதற்கு அடுத்தடுத்து கொடி அறிமுகம் விழா, கட்சியின் மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.