சிந்தறையில் ஆசிரியரிடம் நகையை பறிக்க முயற்சித்த இருவர் கைது

சிந்தறையில் ஆசிரியரிடம் நகையை பறிக்க முயற்சித்த இருவர் கைது

அரியலூர் அருகே ஆசிரியரிடம் நகையை பறிக்க முயற்சித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


அரியலூர் அருகே ஆசிரியரிடம் நகையை பறிக்க முயற்சித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர், ஏப். 1- அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பள்ளி ஆசிரியரிடம் நகையை பறிக்க முயற்சித்த இளைஞர்கள் 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். செந்துறை அருகேயுள்ள கீழப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்செல்வம். திங்கள்கிழமை காலை இவர், பள்ளிக்கு நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். சுதாரித்துக்கொண்ட ஆசிரியர் செந்தில்செல்வம் கூச்சலிட்டதையடுத்து, அவர்கள் அங்கிருந்து வேகத்தில் சென்றனர். இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள், நகையை பறிக்க முயற்சித்த இருவரை துரத்திச் சென்று பிடித்து செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு காவல் துறையினர் மேற்காண்ட விசாரணையில், அவர்கள் நாமக்கல் மாவட்டம், சௌந்தரசோழபுரம், பக்ரிப்பாளையம் வெப்படை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சரவணன்(29), விழுப்புரம் மாவட்டம், ஆயத்தூர், புதுமனைத் தெருவைச் சேர்ந்த இசையாஸ் மகன் ஆமோஸ்பெர்னாண்டஸ் என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.

Tags

Next Story