பெரியகுளம் அருகே விபத்து; ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி!!

பெரியகுளம் அருகே விபத்து; ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி!!

accident

பெரியகுளம் அருகே நிகழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 4 பேர் ஒரு காரில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் தங்களது காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு பிரிவில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர்கள் கார் வந்து கொண்டு இருந்தது அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து போடி நோக்கி சரக்கு வேன் சென்றது. 2 வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் காரில் வந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே காருக்குள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரும் படுகாயமடைந்தார். கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு வெவ்வேறு திசைகளில் விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களும் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களது பெயர் விபரம் தெரியவில்லை. இதனிடையே காரில் வந்தவர்களின் செல்போன் உதவியுடன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story