ஜூன் 12, 13 ஆகிய 2 நாட்கள் ரயில் சேவை ரத்து

ஜூன் 12, 13 ஆகிய 2 நாட்கள் ரயில் சேவை ரத்து

தென்னைக ரயில்

ஜூன் 12, 13 ஆகிய 2 நாட்களில் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, நடந்து வரும் பொறியியல் பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் அரக்கோணம் பிரிவில் திருவள்ளூர் யார்டில் 12 மற்றும் 13 ஜூன் 2024 அன்று காலை 00:20 மணி முதல் 04:15 மணி வரை இரயில்கள் இயக்கப்படாது. (03 மணி 55 நிமிடங்கள்). ரயில் எண். 43201, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - திருவள்ளூர் EMU லோக்கல் மூர் மார்க்கெட் வளாகத்திலிருந்து 04:30 மணிக்கு புறப்படும் இரயிலானது ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண். 43202, திருவள்ளூர் - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் EMU லோக்கல் திருவள்ளூரில் இருந்து 03:50 மணிக்கு புறப்படும் ஜூன் 12 மற்றும் 13 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story