2.5 கிலோ கடத்தல் தங்கம் ,கோவையில் பிடிப்பட்ட இருவர்
விமான நிலையம்
கோவை விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள 2163 கிராம் தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை வந்த பயணிகளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது விமானம் மூலம் கோவை வந்த திருவாரூரை சேர்ந்த தீபா மற்றும் கடலூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து இருவரிடம் சோதனை மேற்கொண்டனர்.இதில் இருவரும் உள்ளாடை மற்றும் வயிற்று பகுதிக்குள் மறைத்து வைத்து 1.57 கோடி ரூபாய் மதிப்புடைய 2.5 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தி வரபட்ட தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story