வேலூரில் ஒயரில் சிக்கிய இரு இளைஞர்களுக்கு படுகாயம்
வேலூர் சத்துவாச்சாரியில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கிரீன்சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையோரம் பிரம்மாண்டமான விளம்பர கம்பம் அமைந்துள்ளது.
இந்த கம்பத்தில் விளம்பர பேனர் ஒன்றை கட்டுவதற்காக முத்துக்குமார், ராஜன், அந்திமான் என்ற தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் அந்த கம்பத்தில் ஏறி விளம்பர பேனர்களை கட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விளம்பர கம்பத்தில் இருந்து அருகே தேசிய நெடுஞ்சாலைக்கு சென்ற வயர் ஒன்று எதிர்பாராத விதமாக அறுந்தது. அந்த வயர் சர்வீஸ் சாலையில் விழுந்தது. அப்போது அந்த சாலையில் சென்ற வாகனஓட்டிகள் சிக்கினர். அதாவது, காகிதப்பட்டறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன்,
கத்தாழம்பட்டு பல்லவர் நகரை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரது கழுத்தில் வயர் சிக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர்,இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார், விளம்பர பேனர்களை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.