உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் : பயணத்திட்டம் வெளியீடு!

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் : பயணத்திட்டம் வெளியீடு!

உதயநிதி ஸ்டாலின் 

நெல்லை, தூத்துக்குடி குமரி மாவட்டங்களில், 'இந்தியா கூட்டணி' வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.
2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'இந்தியா கூட்டணி' வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகிறார். அவரின் 5-வது கட்ட தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை 11ம் தேதி வியாழக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை தென்காசி, தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்கிறார். 13ஆம் தேதி சனிக்கிழமை திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

Tags

Next Story