உதயநிதியிடம் சரக்கு இல்லை இன்னும் நடிகராகவே இருக்கிறார்: அதிமுக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
அதிமுக வட சென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ இன்று தண்டையார்பேட்டை மணிக் கூண்டு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார், உடன் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
வழியெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்தும் பூசணிக்காயை உடைத்தும் வரவேற்றனர். தண்டையார்பேட்டை குடியிருப்பு பகுதிகளில் கிரேன் மூலம் ராட்சச மாலை அணிவித்து, மிட்டாய்களால் மாலை செய்து அணிவித்தும், கிரீடம் வைத்தும் வேட்பாளர் கையில் வாள் கொடுத்தும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். முன்னதாக, தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்,
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ, பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள், காரணம் மத்திய மாநில அரசுகள் மீது மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதால் எங்களுக்கு நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். திமுக செல்கின்ற இடம் எல்லாம் வேட்பாளர் விரட்டி எடுக்கப்படும் செய்தி வருகிறது இதை பார்க்கும் பொழுது மக்கள் ஆளும் அரசு மீது கடும் கோபத்தில் இருப்பது தெரிகிறது.
இரட்டை இலைக்கு தான் அனைத்து வாக்கும் வரும் நிச்சயம் வெற்றி பெறும். இங்கு படித்தவர்கள் ஐடி வேலைகளுக்கு தென்சென்னை செல்கிறார்கள் இங்கே ஐடி நிறுவனங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். கொடுங்கையூர் குப்பை கிடங்கு அகற்றப்படுகிறதா? அல்லது மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறதா? வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எஸ் ஆர் நோ கேள்விகளுக்கு கூட கட்டுரை போல் பதில் அளிக்கிறார், அதிலிருந்து அவர்களிடம் சரக்கு இல்லை என்று தெரிகிறது. இஸ்லாமியர்களிடம் வாக்குகளை நாங்கள் கேட்காமல் வேறு யார் கேட்பது, அதிமுகவில் அவைத்தலைவர் என்று நம்பர் ஒன் போஸ்டிங் இஸ்லாமியரான தமிழ் மகன் உசேன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, தோல்வி வைத்து ஏதோ பேசி வருகிறார்கள்.
கட்சியை சார்ந்து தான் வாக்குகள் இருக்கும், இயக்கமும் சின்னமும் தான் முக்கியம் அப்படிப் பார்த்தால் அதிமுக வலுவான இயக்கம் வலுவான சின்னம் பல வெற்றிகளை குவித்த சின்னம் பல வெற்றிகளை குறித்த இயக்கம் நிச்சயம் எங்களுக்குத் தான் வெற்றி. உதயநிதி ஸ்டாலின் நடிகர் என்னும் நிலையிலிருந்து மாறவில்லை தூங்கி எழுந்தால் ஸ்கிரிப்ட் கொடுக்கிறார்கள் அதை படிப்பது தான் வேலை இன்னும் அவர் அமைச்சராகவோ, அரசியல்வாதியாகவோ உருவாகவில்லை. இன்னும் நடிகராகவே தான் வலம் வந்து கொண்டுள்ளார், சரக்கு இல்லை என்றால் என்ன செய்வது இருக்கும் ஒன்றை திரும்ப திரும்ப பேசி வருகிறார்.