ஐ.நா. சபை காலநிலை மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பசுமை தாயகம் நிர்வாகிகளுக்கு வரவேற்பு

ஐ.நா. சபை காலநிலை மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பசுமை தாயகம் நிர்வாகிகளுக்கு வரவேற்பு

ஐ.நா. சபை காலநிலை மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பசுமை தாயகம் நிர்வாகிகளுக்கு வரவேற்பு

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தீர்மானிக்கும் ஐ.நா.சபையின் காலநிலை மாநாடு துபாயில் நடந்தது. இதில், பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில துணைச்செயலாளர்கள் சேலத்தை சேர்ந்த வெங்கடாசலம். தர்மபுரியை சேர்ந்த மாது ஆகியோர் கலந்து கொண்டு நீர், விவசாயம், வெப்பநிலை மாற்றம், உணவு ஆகிய அமர்வில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து துபாயில் இருந்து தாயகம் திரும்பிய இருவரையும் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும், சென்னையில் இருந்து ரெயிலில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த வெங்கடாசலத்திற்கு பா.ம.க. மற்றும் பசுமை தாயக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story