எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு மிரட்டுகிறது கே. எஸ் அழகிரி பேச்சு

எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு மிரட்டுகிறது கே. எஸ் அழகிரி பேச்சு
X
நாகர்கோவிலில் பேசிய அழகிரி.
வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் உரையாடினார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரசின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தாலும் 40 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். 2002 ஆம் ஆண்டு இதேபோல் நடந்த மூன்று மாநில தேர்தல்களில் தோல்வியடைந்தோம். பின்னர் 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். நாடாளுமன்றத்தில் மோடியை பற்றி விமர்சித்தால் கூட கண்டு கொள்வதில்லை. ஆனால் அதானியை விமர்சித்தால் பதவி நீக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நோக்கம், மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதே ஆகும். நாடாளுமன்றத்தில் புகுந்த சிலர் புகை குண்டு வீசியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவர்கள் வர பாரதிய ஜனதா எம்பி அனுமதி கொடுத்துள்ளதால் இது பற்றிய விசாரணை வெளியே வராது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story