மத்திய அமைச்சராகும் அண்ணாமலை ?
அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அமைச்சரவை பொறுப்புகள் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லி இல்லத்தில் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இலாகாக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஜே.பி.நட்டாவும், அமித்ஷாவும் ஆலோசித்துள்ளனர்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்படியானால் தமிழக மாநிலத் தலைவர் பதவிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வானதி சீனிவாசன் நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட பெயர்கள் பரிசீலணையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாநில பொறுப்புகளிலேயே தொடர விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.