நாகர்கோவில் : பாராளுமன்ற புகைகுண்டு.- மத்திய அமைச்சர் பேட்டி
மத்திய சாலை போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார். பின்னர் அவர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பிரதமர் மோடியின் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரையில் (நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற யாத்திரையில், கலந்து கொள்ள இங்கு வந்துள்ளேன். இந்த யாத்திரை மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த யாத்திரிகர் முக்கிய நோக்கம் 2047 இல் நமது பாரதத்தை உலகிலேயே முதன்மையான நாடாக உருவாக்க வேண்டும் என்பதுதான். நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் புகுந்து புகை கொண்டு வீசிய விவகாரத்தில் பாரதிய ஜனதா எம்.பி பிரதாப் சிம்காவுக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பி இருப்பது தொடர்பாக கேட்கிறீர்கள்.
உச்சகட்ட பாதுகாப்புக்குரிய இடமான நாடாளுமன்றத்தில் அத்துமீது நுழைந்து புகை கொண்டு வீசிய சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. ஒரு செல்போன் கீழே விழுந்தால் கூட எதிர்க்கட்சிகள் கூச்சல் விடுவார்கள். நாடாளுமன்ற சபாநாயகரின் உத்தரவின் பேரில் தீவிரமாக விசாரணை நடக்கிறது. அதன் பிறகு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை சபாநாயகர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது எம் .ஆர் காந்தி எம்.எல்.ஏ, மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் மீனாதேவ் உட்பட பலர் உடன் இருந்தனர்.