உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை 16-ம் தேதிவரை ரத்து.

உதகை - மேட்டுப்பாளையம்  மலை ரயில் சேவை 16-ம் தேதிவரை ரத்து.

மலை ரயில் சேவை ரத்து 

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கல்லாறு பகுதியில் மலை ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்தது. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை, உதகை- மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தில் சீரமைப்பு பணி பெற்று வருவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்த நிலையில் சில இடங்களில் தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யவும் மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் வரும் 16ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story