வாச்சாத்தி வழக்கு: முன்னாள் வனத்துறை அதிகாரி நீதிமன்றத்தில் சரண்

வாச்சாத்தி வழக்கு: முன்னாள் வனத்துறை அதிகாரி  நீதிமன்றத்தில் சரண்

தருமபுரி நீதிமன்றம் 

தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி வழக்கில் தொடர்புடைய முன்னாள் வனத்துறை அதிகாரி நேற்று தருமபுரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த மக்கள் சந்தனக் கட்டை கடத்தலில் ஈடுபடுவதாக கடந்த 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி வனத்துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறைச் சேர்ந்த அதிகாரிகள் அந்தக் கிராமத்தில் தேடுதல் பணி மேற்கொண்டனர். அப்போது, அரசுத் துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுவினர், பழங்குடியின மக்களின் சொத்துகளை சேதபடுத்தியும், ஆண்களை அடித்து துன்புறுத்தியும், சிறுமிகள், பெண்களுக்கு பாலியல் வன் கொடுமைகள் செய்தும் அத்து மீறலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 2011-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக் காலத்தில் வழக்கில் தொடர்புடைய 54 பேர் உயிரிழந்தனர். எனவே, 215 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தண்டனை பெற்ற சிலர் சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ததுடன், தண்டனை பெற்றவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில், சம்பவம் நடந்தபோது தருமபுரி மாவட்ட வன அலுவலராக இருந்து பின்னர் வனத்துறை தலைமை வனப் பாதுகாவலர் வரை பதவி உயர்வு பெற்ற எஸ்.பாலாஜி, தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Tags

Next Story