வைகை அணை நீர்மட்டம் உயர்வு - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் உயர்வு - 5 மாவட்டங்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததை அடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

நேற்று காலை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தபோது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 68-50 அடியாக உயர்ந்தபோது இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது இந்நிலையில் தற்போது நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து 13145 கனஅடியாக உள்ளது அணையிலிருந்து விநாடிக்கு 3169 கனஅடி வெளியேற்றப்படுகிறது நீர்இருப்பு விநாடிக்கு 5579 மில்லியன் கன அடியாக உள்ளது மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ,இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களில் வைகை ஆற்றுக்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்து மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் அணையின் முழு கொள்ளளவான 71 அடி உயர்ந்தவுடன் அணை திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படும்.

Tags

Next Story