திருமாவளவனை ஆதரித்து வைகோ பிரசாரம்

அரியலூரில் விசிக தலைவர் தொல். திருமாவளவனை ஆதரித்து வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அரியலூர் அண்ணா சிலை அருகில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தொல் திருமாவளவனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் சுதந்திர இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் அடுத்து எந்த திசை நோக்கி தமிழகம் பயணிக்க போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல். இந்தியா எந்த திசையில் நடை போட போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் நடைபெறும் தேர்தல். பாசிசத்திற்கும் குடியரசுக்கும் இடையே நடைபெறும் தேர்தல்.

இந்த கூட்டத்திற்கு நான் வரவேண்டும் என்று நானே திரும்பி சின்ன அப்பாவிடம் சொல்வதற்கு காரணம் என் ஆருயிர் சகோதரர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான் வந்தேன் பானை சின்னத்தில் போடுகின்ற திருமாவளவனுக்கு சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்காளர்களும் அதிக அளவில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வீடுகளில் உள்ள வடமொழியில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் கலாச்சாரம் இருந்த காலத்தில் செந்தமிழில் பெயர் சூட்டும் புரட்சியை விதைத்தவர் திருமாவளவன். திராவிட இயக்கத்தையே அழித்து விடுவோம் என்று நாட்டின் பிரதமர் அந்த தலைமை அமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர் நரேந்திர மோடி கூட்டங்களிலே பேசுகிறார். பிரதமருக்கு நாகரிகம் வேண்டும். பொதுமக்கள் எது வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் ஒரு நாட்டின் பிரதம அமைச்சர் இவ்வாறு பேசக்கூடாது. ரத்தத்தினால் வியர்வையினால் படிப்படியாக வளர்த்து இன்று பெருமளவில் வளர்ந்து நிற்கும் திராவிட இயக்கத்தை வேரோடு அழித்து விடுவேன் என்று சொல்வதற்கு எவ்வளவு ஆணவம் வேண்டும் என்பதை இங்கே சொல்கிறேன்.

அரியலூர் திராவிட இயக்க கோட்டை நீங்கள் திராவிட இயக்கத்தை அழித்து விடுவேன் என்று கூறுவது ஜனநாயகமா அப்படி என்றால் நீங்கள் சர்வாதியாக மாறப் போகிறீர்களா இன்று இருக்கக்கூடிய பாராளுமன்ற முறையை ஒழித்து விட்டு அமெரிக்காவில் இருக்கக்கூடிய குடியரசுத் தலைவர் அமைப்பினை உருவாக்க இங்கே ஜனாதிபதி தேர்தல் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணத்தில் பாஜகவினர் கொண்டுவர நினைப்பார்கள். நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ஆகிவிடலாம் சர்வாதிகாரி ஆகிவிடலாம் என்று நினைத்துக் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார் அது நடக்காது. திராவிட இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து அழித்துவிட முடியாது. எத்தனையோ எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் சிந்தனைவாதிகள் கலை உலகில் மின்னும் நட்சத்திரங்கள் உருவாக்கிய இயக்கம் திராவிட இயக்கம் உங்களால் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்கக்கூட முடியாது 27 ஆண்டுகள் நான் திராவிட முன்னேற்றக் கழக இயக்க கொடியை தான் இயன்று இருக்கிறேன்.

அதன் பிறகு நான் கட்சியில் இருந்து வெளியே போனாலும் என்னை பார்த்து கலைஞருக்கட்டும் கேள்வி நீ என்னை இழந்தாயா? நான் உன்னை இழந்தேனா என்பதுதான். கருணாநிதி அவர்கள் நோய் பட்டு இருந்த காலத்தில் என்னை அழைத்துச் சென்று பார்க்க இப்போதைய முதல்வர் ஸ்டாலின் என்னை அழைத்துச் சென்று பார்க்க வைத்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது அப்போது நான் தலைவரிடம் உங்களுக்கு நான் எப்படி சேனாதிபதியாக நான் இருந்தேனோ அதுபோல் தம்பி ஸ்டாலினுக்கு நான் சேனாதிபதியாக இறப்பேன் என்று கூறிய போது அவர் நிம்மதி அடைந்தார்.

இந்தியா கூட்டணியினுடைய கூட்டம் நடைபெற்ற போது நானும் சென்றிருந்தேன் திருமாவளவன் அங்கு வந்திருந்தார் ஸ்டாலினுக்கு நமது நாடு முழுவதும் எவ்வளவு மரியாதை உள்ளது என்று நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். இந்தியாவுக்கே இன்று வழிகாட்டக்கூடிய வகையிலே திராவிட மாடல் ஆட்சி ஸ்டாலின் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட திட்டங்கள் வேறு எங்கும் இல்லை சின்னஞ்சிறு குழந்தைகள் காலை நேரத்தில் பசியாற காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஸ்டாலின் கொண்டு வரும் திட்டங்களை பல மாநிலங்கள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். தமிழர்கள் அதிகம் உள்ள நாடு கனடா அந்த நாட்டினுடைய அதிபர் பிரதம அமைச்சர் நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை தருகிறார் பள்ளிக்கூடங்களுக்கு செல்லுகின்ற பிள்ளைகளுக்கு காலை உணவு கனடா அரசு வழங்கும் இதனை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முதலமைச்சர் செய்திருக்கிறார் அதனை கனடா அரசும் செய்து காட்ட வேண்டும் என்று சொல்லுகின்ற அளவுக்கு ஸ்டாலின் தகுதி பெற்று இருக்கிறார் என்பதை எண்ணும்பொழுது நான் பெருமைப்படுகிறேன்.

எண்ணற்ற திட்டங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அவர் அறிவித்த திட்டங்களில் ஒன்றுதான் பெண்களுக்கு பேருந்து கட்டணம் கிடையாது பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களை அமல்படுத்தியதில் ஸ்டாலின் பெருமளவில் வெற்றி பெற்றது. விவசாயிகளுக்கு இரண்டரை லட்சம் பம்புக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார். இதற்கெல்லாம் உறுதுணையாக இருப்பவர் உங்களுடைய தொகுதி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.

நரேந்திர மோடியின் அரசு தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை ஒழித்து விடுவேன் என்று மேடை ஏறி பேசுகிறார். அகந்தையும் ஆணவம் அகம்பாவமும் கொண்ட பேச்சாக பிரதமரின் பேச்சு அமைந்துள்ளது. ஆகவே இந்த ஆட்சி நீடிக்கும் ஆனால் இந்தியா ஒன்றாக இருக்காது. எனவேதான் இதனை யோசித்து நமது கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். இந்துத்துவா கூட்டம் சனாதனக் கூட்டம் ஆதி மொழி சமஸ்கிருதம் தான் இந்தி தான் அவற்றை தான் எல்லோரும் படிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். சமஸ்கிருதமும் இந்தியும் ஒருக்காலும் தமிழகத்தில் நுழைய முடியாது. கீழப்பலூர் தமிழ் போராளி தியாகி சின்னசாமி மண்ணில் இருந்து பேசுகிறேன் இந்தியை இந்த மண்ணில் திணிக்க முடியாது. 1964 ஜனவரி 24 25ஆம் தேதி பொழுது விடுவதற்குள் 10 லிட்டர் பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு நெருப்பு வைத்துக்கொண்டு தமிழ் வாழ்க தமிழ் வாழ்க இந்தி ஒழிக என்று முழக்கமற்றவரே கீழப்பழுவூர் சின்னசாமி சாம்பல் மேடாக கிடக்கிறார்.

இந்த மண்ணைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சொல்கிறேன் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் மாய்த்துக்கொண்டு தமிழுக்காக உயிரை விட்டவர் கீழப்பழுவூர் சின்னசாமி. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத சூழ்நிலையில் இந்த மண்ணை சேர்ந்த அனிதா தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த தியாக உணர்வு கொண்ட மண் தான் அரியலூர் மண். அரியலூர் மாவட்டத்தில் இன்றைக்கு நடைபெற உள்ள தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிற கடந்த முறையும் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொல் திருமா அவர்கள் இப்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டும் அவர் இந்தியாவிலேயே இன்று மதிக்க தலைவராக விளக்குகிறார் அப்படிப்பட்ட தொல் திருமாவளவன் அவர்கள் இன்னும் நூறாண்டு வாழ வேண்டும் அவர் இந்த மண்ணுக்கும் தமிழ் நாட்டுக்கும் தமிழ் இனத்திற்கும் அவர் பெரும் துணையாக இருக்க வேண்டும் திராவிட இயக்கத்துக்கு பக்கபலமாக இன்று இருப்பதை போலத்தான் என்றுமே இருப்பார் என்ற நம்பிக்கையோடு நான் அவரை வாழ்த்துகிறேன் பல ரட்சிகணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கப் போகிற திருமா அவர்களை நீங்கள் வாழ்க உங்கள் பெருமை வாழ்க நீங்கள் எவ்வாறு அமைதியானவர் எந்த இடத்திலும் கலவரம் உருவாகுவதற்கு திருமா காரணமாக இருக்க மாட்டார் அங்கு கலவரம் ஏற்பட்டால் அந்த கலவரம் சமாதானம் ஆவதற்கு திருமா காரணமாக இருப்பார்.

சாதியின் பெயரால் மகத்தான் பெயரால் பிளவுகள் ஏற்படக்கூடாது என்ற உணர்வு கொண்டவர் தருமா ஆனால் ஜாதியின் பெயரைச் சொல்லி மதத்தின் பெயரைச் சொல்லி இந்த நாட்டை துண்டு போடக்கூடிய அளவுக்கு இந்த நாட்டை கொண்டு செல்கிறார்கள் இந்துத்துவா கூட்டத்தினர். அரசியல் சட்ட திருத்த சட்டம் அதனை கூடாது என்று ஏன் சொல்கிறோம் 2016 டிசம்பர் 31 பிறகு இந்தியாவிற்குள் நுழைந்தவர்களில் முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது இலங்கையில் இருந்து வரக்கூடிய தமிழர்களுக்கு வாக்குரிமை கிடையாது நரேந்திர மோடி அவர்கள் சொல்கிறேன் நீங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று நினைத்தால் நீங்கள் படுதோல்வி அடைவீர்கள் உங்களை தூக்கி எறியும் இந்த தமிழ் சமுதாயம் நாங்கள் ஹிந்தியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனவே இங்கே வந்து நட்டாக்களும் குட்டாக்களும் மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி விட்டு செல்கிறார்கள்.

நரேந்திர மோடி தமிழர்களுக்கு விரோதி. இந்தியை கொண்டு வந்து திணிக்க முடியாது தமிழ்நாடு என்ற பெயரை வைத்ததை நீங்கள் மாற்ற முடியாது அரசு என்ன அறிக்கை தயார் செய்கிறதோ அதை வாசிக்க வேண்டியது தான் கவர்னரின் பணி என்ற சட்டம் சொல்கிறது. ஆனால் உரை தொடங்கும் பொழுதே விஷத்தை கட்டினார் கவர்னர். பெரியார் அண்ணா காமராஜர் கருணாநிதி ஆகியோரின் பெயரை அவர் உச்சரிக்கவில்லை. எத்தனையோ கவர்னர்கள் வந்தார்கள் கண்ணியமாக நடந்து விட்டு போனார்கள் இப்போது உள்ள கவர்னர் மதத்தின் பெயராலே மொழியின் பெயராலே பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று பார்க்கிறீர்கள். புதிய பாராளுமன்ற கட்டிடம் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற உள்ளது. மகாத்மா காந்தியின் படகோடைக்கு காரணமான சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று பாராளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்படுகிறது.

விடுதலைப் போக்காக போராடிய எவ்வளவோ போராளிகள் இருக்கிறார்கள் அவர்களை முன்னிலை படுத்தாமல் சாவர்க்கர் போன்றவர்களை முன்னிலைப்படுத்துவது இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜாதியை ஒற்றுமை வேண்டும் என்பதற்காக ஆயிரத்து 600 கிலோ மீட்டர் இரண்டு கட்டமாக நான் நடைபெற மேற்கொண்டேன் தோழர்களோடு தோழர்களாக அந்த கட்டாந்தரையிலேயே நானும் படுத்து உறங்கினேன். மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி தாமிரபரணி கரையிலிருந்து புறப்பட்டு ஆயிரத்து நூறு கிலோமீட்டர் நடைவணம் மேற்கொண்டு சென்னை சென்று சேர்ந்தேன். மீறிக்கொண்டு அண்ணா கல்லறைக்கு சென்று சேர்ந்தோம் எங்களை போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனது தாயார் அதே நாளில் ஊரின் எல்லையிலே மதுவை ஒழிப்பதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள். தண்ணீர் கூட குடிக்காமல் என் தாயார் அங்கு காத்திருந்தார்கள். நீ அறிக்கை விட்டு விட்டாய் இங்கு நான் உண்ணாவிரதம் இல்லாமல் போனால் என்ன அர்த்தம் என்று கூறினார். இரண்டாவது முறையாக என் தாயார் உண்ணாவிரதம் இருந்த காரணத்தினால் உடல்நலம் குன்றி என் தாயாரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டு சேர்த்தேன். மருத்துவர்கள் மிகவும் வேதனைப்பட்டார்கள். நாட்டிற்காக மக்களுக்காக இந்த நாட்டில் மதுவை ஒழிப்பதற்காக எனது தாயார் தன் உயிரையே கொடுத்து மறைந்து போனார். என்றார்.

Tags

Next Story